பாகிஸ்தானின் கட்டாய மதமாற்றம் என்பது புனையப்பட்ட போலிச் செய்தி

- குற்றச்சாட்டுகளுக்கு வெளியுறவு அலுவலகம் மறுப்பு

பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட முறையில் கட்டாய மதமாற்றங்கள் இடம்பெறுவதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி விளக்கமளித்துள்ளார். இத்தகவலை 'ரேடியோ பாகிஸ்தான்' வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் இடம்பெறுவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை புனையப்பட்டவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை. சர்வதேச மட்டத்தில் பாகிஸ்தானை இழிவுபடுத்துவதற்காகவே இவ்வாறான செய்திகள் பாகிஸ்தானின் விரோதிகளால் சோடிக்கட்டப்பட்டுள்ளன” என்று ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி கூறினார்.

தனிநபர்கள் மற்றும் அரசு சாராத ஒரு சில மதமாற்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், ஆனால் அரசு சார்ந்த எந்தவொரு மதமாற்ற சம்பவத்துக்கும் எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையினரைச் சேர்ந்த சுமார் 1,000 சிறுமிகள் பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்துக்கு மாற நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட அறிக்கையை ஒரே நாளில் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

"இதுபோன்ற புகார்கள் வந்த போதெல்லாம் அரசு குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், விரைவான மற்றும் நீதிமான தீர்ப்பை வழங்குவதற்காக, நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக அரசு வழக்கு தொடர்ந்து செயற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பும், சட்ட மற்றும் நிர்வாக கட்டமைப்பும் பாதுகாப்பு அளித்துள்ளன. சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து பாகிஸ்தானின் நீதித்துறை மிகவும் விழிப்புடன் உள்ளது.மேலும், சிறுபான்மையினரின் உரிமைகளை மீறுவது தொடர்பான வழக்குகளில் ஊடகங்களும் சிவில் சமூகமும் சுயாதீனமாக செயல்படுகின்றன. இது பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட கலாசாரத்தை பாகிஸ்தானில் ஏற்படுத்தியள்ளது.சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானின் சம குடிமக்கள் மற்றும் அவர்களின் மதங்களை பின்பற்ற அவர்களுக்கு பூரண சுதந்திரம் உள்ளது.எங்கள் சமூகத்திற்கு சிறுபான்மையினர் பலவிதத்தில் பங்களிப்பு செய்துள்ளனர். நாங்கள் அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

Sat, 01/02/2021 - 10:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை