கயந்த கருணாதிலக்கவுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ தொற்று இல்லை

கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கடந்த 05ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் அவருடன் நெருக்கமான தொடர்பை பேணியவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தானாக முன்வந்து அவர் தனது குடும்பத்தினருடன் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டார்.  

இந்தப் பரிசோதனைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவுக்கோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கோ கொவிட் 19தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர ​ெபர்னாண்டோ தெரிவித்தார்.

Tue, 01/12/2021 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை