தாய்வானுக்குள் சீன இராணுவ விமானம்

சீனா, தாய்வானை அச்சுறுத்துவதை நிறுத்தும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

தாய்வானின் தற்காப்பு வட்டாரத்திற்குள் 13 இராணுவ விமானங்களைச் சீனா கடந்த சனிக்கிழமை அனுப்பிவைத்ததாய் நம்பப்படுகிறது. இராணுவ, இராஜதந்திர, பொருளாதார நெருக்குதலைத் தாய்வானுக்கு அளிப்பதை உடனடியாக நிறுத்தும்படி பெய்ச்சிங்கிற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சு கோரிக்கை விடுத்தது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தாய்வானியப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி அமைச்சு வலியுறுத்தியது. சீனாவின் வான் பகுதியில் அத்துமீறலைத் தொடர்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை தாய்வான் முடுக்கிவிட்டுள்ளது.

Mon, 01/25/2021 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை