இராணுவ பயிற்சி வழங்குவதை இராணுவ மயமாக்கலாக கருதுவதா?

தவறாக தொடர்புபடுத்தக் கூடாது

என்கிறார் அமைச்சர் கெஹெலிய

இராணுவ பயிற்சி வழங்குவதை இராணுவ மயமாக்கலாக தொடர்பு படுத்துவது அர்த்தமற்றது. இராணுவ பயிற்சி வழங்குவது குறித்து ஆராய்வதில் தவறில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழக்கப்போவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் மேலும் கூறிய அவர்,

இராணுவப் பயிற்சி வழங்குவதால் நாடு இராணுவ மயமாக்கப்படுமா என வினவப்படுகிறது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த நாடுகள் இராணுவமயமாகியுள்ளதா என சிந்திக்க வேண்டும்.

இராணுவ பயிற்சி தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.நாட்டு நிலைமை நிர்வாகம் என்பவற்றின் அடிப்படையில் இதற்கான தேவை குறித்து ஆராய்வதில் தவறு கிடையாது. உலகில் முன்னேற்றகரமான நாடுகள் மற்றும் ஜனநாயகம் முழுமையாக பின்பற்றப்படும் நாடுகளில் இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. இராணுவத்தின் புதிய ஊடக பணிப்பாளராக முதலாவது ஆவணத்தில் கையொப்பமிட்டு சுபவேளையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் ஊடக பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, இராணுவ ஊடக ஆலோசகர் சிசிர விஜேசிங்க, கேர்ணல் விஜித ஹெட்டியாராச்சி, மேலதிக கேர்ணல் மீடியா கேர்ணல் விஷ்வஜித் வித்யானந்த உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கண்டியை பிறப்பிடமாக் கொண்ட பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, 1990ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டு தனது அடிப்படை பயிற்சிகளை முடித்துக் கொண்டு 1992ஆம் ஆண்டு இரண்டாவது லெப்டினன்டாக வெளியேறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் பாதுகாப்பு துறைசார் கற்கை நெறிகளை முடித்துள்ள இவர், தியத்தலாவை இராணுவ அகடமி, இராணுவத் தலைமையகம் உட்பட இராணுவத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார். இலங்கை இராணுவ பீரங்கி படையைச் சேர்ந்த இவர், தாய் நாட்டிற்கு சேவையாற்றியமைக்காக ரண சூர பதக்கம், உத்தம சேவா பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 01/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை