கொழும்பு - பதுளை விஷேட ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
கொழும்புக்கும் பதுளைக்குமிடையிலான தெநுவர ரயில் சேவை நேற்று முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்கூட்டிய ஆசனப் பதிவுகளின் ஊடாக மேற்படி ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக முன்கூட்டிய ஆசன பதிவுகளின் எண்ணிக்கை குறைந்த காரணத்தினால் மேற்படி தீர்மானத்தை எடுத்ததாக அந்த திணைக்களம் தெரிவித்தது.
அதேவேளை மேற்படி ரயிலில் பயணிப்பதற்காக முன்கூட்டி ஆசனங்களை பதிவு செய்து கொண்டவர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுபடும் பொடி மெனிக்கே ரயில் ஊடாக தமது பயணங்களை முன்னெடுக்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் நேற்றுமுதல் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் தெநுவர ரயில் சேவையும்பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அதன் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn
Post a Comment