வவுனியா தட்சனாங்குளம் பகுதியில் சட்டவிரோத மாடு அறுப்பு

- மாசாக்கப்படும் குளம் 

வவுனியா, தட்சனாங்குளம் பகுதியில் சட்டவிரோத மாடு அறுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், வெட்டப்படும் மாட்டின் தலைகள் குளத்தினுள் வீசப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  

வெட்டப்படும் மாட்டின் தலை மற்றும் கழிவுகள் அப்பகுதியில் உள்ள குளத்தினுள் வீசப்பட்டு வருகின்றன.  

இவற்றை காகம் முதலிய பறவைகளும், நாய் போன்றனவும் எடுத்து செல்வதால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய நிலையும் உருவாகியுள்ளது. விவசாய தேவைக்காக பயன்படுத்தப்படும் குளத்து நீரும் மாசுபடுவதாக அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

அடிக்கடி இப்பகுதியில் சட்டவிரோத மாடு வெட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

வவுனியா விசேட நிருபர் 

       

 

Thu, 01/21/2021 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை