ஹற்றனில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டியின் உடல் மீட்பு
ஹற்றன், லெதண்டி மால்புறோ டிவிசனில், சிறுத்தைக் குட்டியொன்று இறந்த நிலையில் ஹற்றன் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய, ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார் சிறுத்தைக் குட்டியின் உடலை மீட்டு, நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டியின் உடலில் காயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுத்தைக் குட்டி எவ்வாறு உயிரிழந்தது என்பதுத் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Thu, 01/07/2021 - 08:28
from tkn
Post a Comment