வீடியோ தொழில்நுட்ப வழக்கு விசாரணைகள்; விரைவில் நடைமுறை

கொவிட் வைரஸ் தொற்று நிலையிலும் கூட நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகளை கிரமமாக மேற்கொள்ளும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையை அதற்காக பயன்படுத்தும் ஆரம்ப நடவடிக்கையாக வீடியோ தொழில்நுட்பம் ஊடாக மேற்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் நேற்று நடைபெற்றன.  அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அழைப்பதற்கு நடவடிக்கையெடுக் குமாறும் எதிர்க்கட்சியினரால் நேற்று திங்கட்கிழமை சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டு எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு கூறினார்.

''மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர விடயத்தில் அது தொடர்பாக நன்கு ஆராய்ந்து சட்டப்பூர்வமான பின்னணியுடனேயே அவரை பாராளுமன்றத்திற்கு அனுமதியளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ரஞ்சன் ராமநாயக்க விடயத்திலும் சட்ட ஆலோசனைகளை பெற்று இறுதித் தீர்மானத்தை வழங்குகின்றேன். இதற்கு மூன்று வாரகால அவகாசத்தை வழங்குகங்கள். உறுப்பினர்களுக்கு இத தொடர்பாக எழுத்து மூலம் ஏதேனும் முன்வைக்க இருந்தால் இரண்டு வாரங்களுக்கு அதனை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்'' என்றும் அவர் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி ரத்து தொடர்பில் சபையில் கடும் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.

Wed, 01/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை