மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ரஜினி திட்டம்

அடுத்த சில தினங்களில் சிகிச்சைக்காக ரஜினிகாந்த் வெளிநாடு செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கட்சியே ஆரம்பிக்கப் போவதில்லை என்று ரஜினி அறிவித்தும் கூட, இன்னும் சில மூத்த அரசியல்வாதிகள் அவரையே நம்பிக் கொண்டிருக்கின்றனர். ரஜினி தனது .முடிவை விரைவில் மாற்றி கொள்வார் என்று தங்களைத் தாங்களே அவர்கள் ஆசுவாசப்படுத்தி கொள்கின்றனர்.

ஆனால், 'அண்ணாத்த' பட வேலையில் ரஜினி குறியாக இருக்கிறார். அந்தப் படத்தை நம்பி பலர் இருப்பதால், அதை விரைவில் முடித்துத் தரும் நிலையிலும் இருக்கிறார்.பெப்ரவரி மாத இறுதியில் இந்த படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சைக்காக ரஜினிஅமெரிக்கா போக போவதாக தகவல் வந்துள்ளது. தனக்கு உடனடியாக மேல் சிகிச்சை வேண்டும் என்று ரஜினி உணர்கிறாராம். அதனால், அடுத்த சில நாட்களில் அமெரிக்கா அல்லது சிங்கப்பூருக்குச் செல்ல யோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது சாத்தியமா என்று தெரியவில்லை. எந்த நாட்டைப் பார்த்தாலும் கொரோனா பரவி இருக்கிறது.அதிலும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

அப்படி இருக்கும்போது, வெளிநாட்டு பயணம் இந்த சூழலில் தேவையா என்றும் பலர் ஆலோசனை கூறியுள்ளனர்.

Sun, 01/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை