புதிய வகை ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது வடகொரியா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வட கொரியா கட்சிப்படுத்தியுள்ளது. இதனை உலகின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று அந்நாட்டு அரச ஊடகம் விபரித்துள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் மேற்பார்வையில் இடம்பெற்ற அணிவகுப்பு ஒன்றில் பல்வேறு ஏவுகணைகளும் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பதற்கு ஒருசில தினங்கள் இருக்கும் நிலையிலேயே இந்த இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மிக அரிதான அரசியல் கூட்டம் ஒன்றில், தமது நாட்டின் மிகப்பெரிய எதிரியாக அமெரிக்கா இருப்பதாக கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

கொடிகளை அசைத்தவாறு நிற்கும் கூட்டத்திற்கு மத்தியில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்ட குறைந்தது நான்கு பெரிய ஏவுகணைகள் எடுத்துச் செல்லப்படுவதை காட்டும் படங்களை வட கொரிய அரச ஊடகம் வெளியிட்டுள்ளது. இவ்வாறான ஏவுகணை முன்னர் காணப்படவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Sat, 01/16/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை