Header Ads

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இணைய அமெரிக்கா நிபந்தனை

அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் பின்பற்றினால் மட்டுமே, அந்த ஒப்பந்தத்தில் தங்கள் நாடு மீண்டும் இணையும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் கூறியதாவது:

அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ஜோ பைடன் தயாராக உள்ளார். ஆனால், அந்த ஒப்பந்த நிபந்தனைகள் அனைத்தையும் ஈரான் மீண்டும் பின்பற்றினால் மட்டுமே அமெரிக்காவும் மீண்டும் தனது பழைய நிலைப்பாட்டுக்கு வரும்.

தற்போதைய நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் பல நிபந்தனைகளிலிருந்து ஈரான் வெகுதொலைவு விலகிச் சென்றுள்ளது என்றார்.

2015 ஆம் ஆண்டு ஈரான் மற்றும் உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலகிக் கொண்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளில் சிலவற்றை மீறி செயற்பட்டு வருகிறது.

Sat, 01/30/2021 - 15:04


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.