யூடியுப் சமூக ஊடகமும் ட்ரம்ப் மீது நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடவடிக்கை எடுத்துவரும் சமூக ஊடகங்களின் வரிசையில் யூடியுப்பும் அவரை இடைநிறுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியுப், ட்ரம்ப் கணக்கில் புதிய வீடியோக்களை பதிவு செய்வதற்கும் நேரடி ஒளிபரப்புகளை மேற்கொள்வதற்கும் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு தடை கொண்டுவந்துள்ளது. இந்த இடைநிறுத்தக் காலம் மேலும் நீடிக்கப்படலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

வன்முறைகளைத் தூண்டுவது தொடர்பான தமது விதிகளை ட்ரம்பின் யூடியுப் பக்கம் மீறி இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை பல வீடியோக்களை பதிவிட்டதில் அதில் சிலது தொடர்ந்தும் பார்க்கக் கூடியதாக அவரது யூடியுப் பக்கத்தில் உள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருப்பதோடு ட்விட்டரில் அவருக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/14/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை