கிளிநொச்சி பனை, தென்னை வள அபிருத்தி சங்கத்தில் குழப்பம்

இருவர் உண்ணாவிரதம்

 

கிளிநொச்சி பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தொழிலாளிகள் இருவர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதோடு, சங்கத்திற்குட்பட்ட 30 கள்ளுக்கடைகளும் பூட்டப்பட்டிருப்பதாக தொழிலாளிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை நெருக்கடிக்குள் உள்ளாக்கியுள்ளது எனத் தெரிவித்து 04.01.2021 கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் நியமித்த நியமன இயங்குநர் சபையினை இரத்துச் செய்யவேண்டும்,தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அவர்களின் குடும்ப நிலைமைகளை கருதி தற்போதுள்ள இயக்குநர் சபையை மீளவும் இயங்க விடுதல், சங்கத்தின் கிளைக்குழு தேர்தலை நடாத்தி புதிய இயக்குநர் சபையினை உருவாக்குதல் போன்ற மூன்று கோரிக்கைகளை உண்ணாவிரதம் போராட்டடத்தில் இரண்டு தொழிலாளிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Sat, 01/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை