மெக்சிகோ ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகோ ஜனாதிபதி அன்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் ஒப்ராடோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமக்கு சிறிய அளவில் நோய் அறிகுறிகள் இருப்பதாகவும் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியான நிலையில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் 67 வயதான லோபஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு 150,000ஐ நெருங்கி இருக்கும் நிலையில் அங்கு நோய்ப் பரவலும் அதிகரித்துள்ளது.

தாம் வீட்டில் இருந்து பணிகளை தொடர்வதாக லோபஸ் தெரிவித்துள்ளார். இதன்போதும் ரஷ்யா தயாரித்த தடுப்பு மருந்தை பெறுவது பற்றி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் 12 மில்லியன் டோஸ்களை பெறுவதற்கு முயன்று வருவதாக மெக்சிகோ ஜனாதிபதி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

கொரோனா தொற்று ஆரம்பம் தொடக்கம் இதுவரை மெக்சிகோவில் 1.75 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்நாட்டில் 149,614 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்து அதிக உயிரிழப்பு பதிவான நாடாகவும் அது உள்ளது.

Tue, 01/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை