புதிய கொரோனா சம்பவம்: சீன நகரில் பொது முடக்கம்

சீனாவின் ஹூபே மாநிலத் தலைநகர் ஷிஜியாசுவாங்கில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நகரில் பொதுமக்களும் வாகனங்களும் நகரை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாகச் சீனாவில் பதிவாகும் பெரும்பாலான உள்ளூர் தொற்றுச் சம்பவங்கள் ஷிஜியாசுவாங் நகரில் அடையாளம் காணப்படுவதையொட்டி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீனாவில் கடந்த வியாழக்கிழமை உள்ளூர் அளவில் 37 பேருக்குக் வைரஸ் தொற்று உறுதியானது. அவர்களில் 33 பேர் ஹூபே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அது கடந்த புதனன்று அடையாளம் காணப்பட்ட 52 வைரஸ் தொற்றுச் சம்பவங்களை விடக் குறைவு. சீனா முழுவதும் கொரோனா தொற்றுச் சோதனைத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

5 மருத்துவமனைகள் கொவிட்–19 நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

சீனாவில் அண்மைய வைரஸ் பரவல் ஐரோப்பாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் போன்று இருப்பதாக அதிகாரிகள் கூறினர். சீனாவில் அது எவ்வாறு பரவியது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  

Sun, 01/10/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை