நோர்வே: உயிரிழந்தோருக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை

பைசர்–பயோஎன்டெக் தடுப்பூசிகளுக்கும், அதைப் போட்டுக்கொண்ட பின்னர் உயிரிழந்த சில மூத்தோருக்கும் இடையில் தொடர்பில்லை என்பதைக் கண்டுபிடித்திருப்பதாக நோர்வே தெரிவித்துள்ளது.

இருப்பினும் மூத்தோரின் சுகாதாரத்தைப் பரிசீலித்த பின்னர் தடுப்பூசியைப் போடும்படி மருத்துவர்களை அது கேட்டுக்கொண்டது.

நோர்வேயில் மூத்தோருக்கான தடுப்பூசித் திட்டம் ஆரம்பித்ததில் இருந்து 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 பேர் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நாட்பட்ட நோய்களுடன் வசித்துவந்தவர்கள்.

அத்தகைய மூத்தோருக்கு கொவிட்–19 எளிதாகத் தொற்றக்கூடுமென சுகாதார அதிகாரிகள் கூறிவருகின்றனர். ஜெர்மனியிலும் இஸ்ரேலிலும் வைரஸ் தொற்றுத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதில் உள்ள தொடர்புகள் கண்டறியப்படவில்லை.

அதைத் தொடர்ந்து, ஹொங்கொங்கும் அவுஸ்திரேலியாவும் பைசர்–பயோஎன்டெக் தடுப்பூசிகளைப் பற்றிக் கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளன.

Wed, 01/20/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை