ஹூத்தி கிளர்ச்சியாளர்களை இணைக்க அமெரிக்கா முடிவு

யெமன் ஹூத்தி கிளர்ச்சிக் குழுவை தீவிரவாதிகள் பட்டியலில் இணைக்கப்போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். இந்த நகர்வு யெமனின் மனிதாபிமான பிரச்சினையை மோசமடையச் செய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் பதவியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை புதிய நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக ஈரானுடன் இராஜதந்திர உறவை மீள ஏற்படுத்துவதில் பைடன் நிர்வாகத்திற்கு இந்த நடவடிக்கை தடங்கலை ஏற்படுத்தக்கூடும். ஹூத்திக்களுடன் ஈரான் நெருங்கிய உறவை கொண்டுள்ளது.

யெமனின் கணிசமான பகுதியை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு ஏற்கனவே அமெரிக்காவின் தடைகளுக்கு முகம்கொடுத்துள்ளது.

Tue, 01/12/2021 - 16:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை