இந்தோனேசிய விமானம் வீழ்ந்த இடம் கண்டுபிடிப்பு

இந்தோனேசிய விமானம் வீழ்ந்த இடம் கண்டுபிடிப்பு-Parts of the Indonesia Sriwijaya Airlines Plane-Body Parts Found

- விமான பாகங்கள், உடல் பாகங்களும் மீட்பு
- கடலில் தொடர்ந்தும் தேடல்

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட நிலையில் காணாமல் போன விமானம் வீழ்ந்த இடத்தை கண்டுபிடித்துள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒரு சில உடல் பாகங்களையும் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசிய விமானம் வீழ்ந்த இடம் கண்டுபிடிப்பு-Parts of the Indonesia Sriwijaya Airlines Plane-Body Parts Found

சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்ட கடல் பகுதியில் 10 இற்கும் அதிகமான கப்பல்கள் மற்றும் சுழியோடிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், கடலில் மட்டத்திலிருந்து 23 மீற்றர் (75 அடி) ஆழத்திலிருந்து இவ்வாறு அதன் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தோனேசிய விமானம் வீழ்ந்த இடம் கண்டுபிடிப்பு-Parts of the Indonesia Sriwijaya Airlines Plane-Body Parts Found

குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளதோடு, பயணிகள் உயிருடன் இருக்க பிரார்த்திக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே குறித்த விமானத்தின் பாகங்கள் எனத் தெரிவிக்கப்படும் பகுதிகளை இந்தோனேசிய மீனவர்கள் சிலர் மீட்டு, இது தொடர்பில் வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

இந்தோனேசிய விமானம் வீழ்ந்த இடம் கண்டுபிடிப்பு-Parts of the Indonesia Sriwijaya Airlines Plane-Body Parts Foundவிமானத்தின் சில உடைந்த பாகங்களின் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இதனால், விமானம் கடலில் விழுந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும், விமானத்தில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட, ஶ்ரீவிஜயா விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று கடலில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படும் நிலையில், அதில் இருந்த 62 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ஜகார்தாவில் உள்ள சொகர்னோ ஹட்டா (Soekarno-Hatta) விமான நிலையத்தில் இருந்து, பொண்டியனாக் (Pontianak) என்ற இடத்துக்கு புறப்பட்ட விமானம், புறப்பட்டு 4 நிமிடங்களில் திடீரென ரேடார் கருவிகளின் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. இந்த விமானத்தில் 50 பயணிகளுடன், 12 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர்.

10,900 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 250 அடி உயரத்திற்கு அதி வேகமாக கீழே இறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனேசிய விமானம் வீழ்ந்த இடம் கண்டுபிடிப்பு-Parts of the Indonesia Sriwijaya Airlines Plane-Body Parts Found

இதனிடையே, கடலில் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக கூறும் இந்தோனேசிய மீனவர்கள், விமானத்தின் சில உடைந்த பாகங்களை கண்டுபிடித்தற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

இதனால், விமானம் கடலில் விழுந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும், விமானத்தில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்தோனேசிய விமானம் வீழ்ந்த இடம் கண்டுபிடிப்பு-Parts of the Indonesia Sriwijaya Airlines Plane-Body Parts Found

இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் 10 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் மீட்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமானத்தின் சிதைவுகளாக நம்பும் பொருட்களை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தோனேசிய விமானம் வீழ்ந்த இடம் கண்டுபிடிப்பு-Parts of the Indonesia Sriwijaya Airlines Plane-Body Parts Found

Sun, 01/10/2021 - 14:52

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை