மலையக தமிழரது வாழ்வாதாரத்துக்கு இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும்

இ.தொ.காவுடனான சந்திப்பில் ஜெய்சங்கர் உறுதி

மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இ.தொ.கா உறுப்பினர்களுடனான சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை இலங்கைக்கான இந்திய உயர்த்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுகளுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் போது பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான திட்ட வரைவுகளும் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன

சந்திப்பின்போது இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர்கள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹற்றன் விசேட நிருபர்

Fri, 01/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை