பரிந்துரை கிடைத்தவுடன் தடுப்பூசிகள் வந்துசேரும்

- சபையில் உபுல் எம்.பிக்கு பவித்ரா பதில்

கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர முன்னர் அதன் தரம், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. இது தொடர்பில் ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகள் எமக்கு கிடைக்கப் பெற்றவுடன் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை  எடுக்குமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில் ஆளும் கட்சி எம்.பியான உபுல் கலப்பதியினால் கொவிட் -19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலைமை குறித்தும், கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் இலங்கைக்கு எப்போது கொண்டுவரப்படுமென கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 01/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை