மின்தடையால் இருளில் மூழ்கியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மின் தடையால் நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. தொடர்ந்து சில பகுதிகளில் மீண்டும் மீன்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது. இந்த திடீர் மின்தடையை அடுத்து அமைதி காக்கும்படி அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டனர். இதனை சீர் செய்வதற்கு பல மணித்தியாலங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் மின் தடை வழமையான ஒன்று. மருத்துவனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மின்பிறப்பாக்கிகள் மாற்றாக நிறுவப்பட்டுள்ளன.

“மின் பரிமாற்ற முறை அலைவரிசையில் ஏற்பட்ட திடீர் சரிவு காரணமாகவே நாடு தழுவிய மின் தடை ஏற்பட்டுள்ளது” என்று பாகிஸ்தான் மின்சக்தி அமைச்சர் ஒமர் அயுப் கான் தெரிவித்தார்.

இஸ்லாமாபாத், லாஹூர் மற்றும் கராச்சி போன்ற பிரதான நகரங்களும் இதனால் பாதிக்கப்பட்டன.

2015ஆம் ஆண்டும் பாகிஸ்தானில் இதே போன்று நாடுதழுவிய மின்தடை ஏற்பட்டது. அதில் விமான நிலையங்கள், வர்த்தகக் கட்டடங்கள் உள்ள வட்டாரங்கள் உட்பட பாகிஸ்தானின் 80 வீதமான பகுதி இருளில் மூழ்கியது.

அந்தச் சம்பவம் அந்நாட்டு வரலாற்றில் நேர்ந்த மிகமோசமான மின்தடையாகக் கருதப்படுகிறது.

Mon, 01/11/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை