கொரோனா தினசரி உயிரிழப்பு அமெரிக்காவில் சாதனை உச்சம்

கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தினசரி உயிரிழப்பு 3,936 ஆக அதிகரித்திருப்பதாக அது தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 250,000க்கும் அதிகமான புதிய தொற்றுச் சம்பவங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்கள் பெருந்தொற்றை கட்டுப்பாடுத்துவதற்கு போராடி வருகின்றன. அண்மைய விடுமுறைகள் காரணமாக நோய்த் தொற்று அதிகரித்த பகுதியாக கலிபோர்னியாக மாறி உள்ளது. அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உயிர் தப்புவதற்கு மிகக் குறைவான வாய்ப்புகள் இருக்கும் நோயாளர்களுக்கு அம்புலன்ஸ் வசதியை வழங்காமல் இருக்க லொஸ் ஏஞ்சல்ஸ் கௌண்டி அம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பிராந்தியத்தில் மிக விரைவில் கொரோனா தொடர்பிலான தினசரி உயிரிழப்புகள் 1,000 ஐ தாண்டிவிடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Thu, 01/07/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை