பைசர் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்

பைசர்–பயோஎன்டெக் தடுப்பு மருந்தை அவரசப் பயன்பாட்டுக்கு உகந்ததாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

இருமுறை செலுத்தப்பட வேண்டிய அந்தத் தடுப்பு மருந்தின் நன்மைகள் பற்றி, வட்டாரப் பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து நாடுகளின் சுகாதார அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கவிருப்பதாக அது குறிப்பிட்டது.

ஏழை நாடுகள் தடுப்பு மருந்தை விரைவில் பெற்றுக்கொள்ள தடுப்பு மருந்துகளின் அவரசப் பயன்பாட்டுக்கான பட்டியலை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது.

பைசர்–பயோஎன்டெக் தடுப்பூசி பாதுகாப்பு தரநிலைகளைப் பூர்த்திசெய்வதாக அது குறிப்பிட்டது.

அந்தத் தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகளைக் காட்டிலும், அதன் நன்மைகள் அதிகமாக இருப்பதை உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியது.

95 வீதம் செயல்திறன் கொண்டது என்று உறுதி செய்யப்பட்டிருக்கும் பைசர்–பயோஎன்டெக் தடுப்பு மருந்தை பயன்படுத்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்யம் உட்பட 45க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. இந்த மருந்தை ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்கள் போட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு எதிராக உலகெங்கும் தற்போது 150க்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டும் வருகின்றன. இதில் 48 மருந்துகள் மனிதர்களிடம் சோதனை செய்யப்பட்டவை என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதில் உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் முதல் தடுப்பு மருந்தாக பைசர்–பயோஎன்டெக் உள்ளது.

இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் உடனடியாக இவற்றுக்கு ஒப்புதல் வழங்கி தடுப்பு மருந்துகளை தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து கொள்ள முடியும். நாட்டில் தேவையான பகுதிகளுக்கு அவற்றை விநியோகித்துக் கொள்ளவும் முடியும்.

Sat, 01/02/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை