லெபனானில் கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து தொடர்ந்து போராட்டம்

லெபனானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டிருக்கும் கடுமையாக முடக்க நிலைக்கு எதிராக நான்காவது நாளாகவும் வடக்கு நகரான திரிபோலியில் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு அரச கட்டடங்கள் தீவைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. முந்தைய தினத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டதாக கூறப்படும் ஆர்ப்பாட்டக்காரர் ஒமர் தைபாவின் இறுதிக் கிரியையில் பெரும் திரளானவர்கள் பங்கேற்றனர். கொரோனா தொற்று சம்பவங்கள் வேகமாக அதிகாரித்து வரும் நிலையில் லெபனானில் இந்த மாதம் முழுமையான உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தியாவசிய பணிகள் தவிர்த்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டிருப்பதோடு பேரங்காடிகளில் இருந்து உணவுப் பொருட்களை வரவழைத்துக் கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் வேலையின்றி இருப்பதால் பலரும் வருமானத்தை இழந்துள்ளனர். அரசு 230,000 குடும்பங்களுக்கு ஓரளவுக்கு நிதி உதவிகள் அளித்தபோதும் சுமார் ஏழு மில்லியனான நாட்டி பாதி மக்கள் தொகையினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இதில் கால் பங்கினர் கடுமையான வறுமையில் உள்ளனர். லெபனானில் சுமார் 300,000 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 2,600 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் கடந்த ஒரு மாத்திற்குள் மாத்திரம் 116,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதோடு 1,144 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sat, 01/30/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை