தடுப்பூசியின் திறனை அதிகரிக்க மொடர்னா நிறுவனம் நடவடிக்கை

பிரிட்டனிலும், தென்னாபிரிக்காவிலும் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய திரிபை முறியடிக்கும் வகையில் தங்கள் தடுப்பூசியின் செயல்திறனை மேம்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருவதாக மொடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அது கூறியது.

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸை முறியடிப்பதில், தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருப்பது முதற்கட்டச் சோதனையில் தெரியவந்திருப்பதாக மொடர்னா கூறியது. புதிய வகைக் வைரஸை முறியடிக்க மூன்றாவது ஊசி போடப் பரிந்துரைப்பதா, ஏற்கனவே உள்ள தடுப்பூசியில் கூடுதல் மருந்தைச் சேர்ப்பதா என்பது பற்றிச் சோதித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. என்றாலும், இரண்டு புதிய வகை வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் திறனைத் தற்போதுள்ள தடுப்பூசி கொண்டிருப்பதாகவும் அது கூறியது.

இதற்கிடையே, பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் திரிபை முறியடிக்கும் செயல்திறன் தங்கள் தடுப்பூசிக்கு இருப்பதாய் பைசர் நிறுவனம் கூறியிருந்தது.

என்றாலும், தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை திரிபுக்கு எதிராக அது செயல்படுமா என்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

Wed, 01/27/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை