அமீரக விமானங்கள் இங்கிலாந்து வரத்தடை

புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வரும் நேரடி விமானங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, கிழக்கு ஆபிரிக்க நாடுகளான புருண்டி, ருவான்டா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வரும் விமானங்களை, கொரோனா பயணத் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச வான் வழியை இங்கிலாந்து அரசு மூடியுள்ளது. மேற்கூறிய நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

துபாயிலிருந்து லண்டன் செல்லும் விமானச் சேவை உலகின் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அபாயம் உள்ளதாகக் கருதப்படும் 33 நாடுகளுக்குப் பிரிட்டன் தடை விதித்துள்ளது. அவற்றுள் பெரும்பாலானவை ஆபிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ளவை.

Sat, 01/30/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை