Header Ads

பாதுகாப்பான முறையில் நீதிமன்றச் செயற்பாடுகள்

பாதுகாப்பு கருவிகளை வழங்கினார் நீதியமைச்சர்

கொவிட்19 வைரஸ் பரவலின் இரண்டாவது அலைக்குப் பின்னர் மீண்டும் பாதுகாப்பான முறையில் நீதிமன்றச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புக் கருவிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி அதிகாரிகளிடம் கையளித்தார். கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்த பாதுகாப்பு உபகரணங்களை உரிய அதிகாரிகளிடம் நேற்று திங்கட்கிழமை கையளித்திருந்தார்.

கொவிட்19 இரண்டாவது அலை காரணமாக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீதிமன்ற நடவடிக்கைகளை முறையாக நடத்த முடியவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக சுகாதார கருவிகளை நீதி அமைச்சர் வழங்கியுள்ளார்.

இந்த உபகரணங்களை விநியோகிக்கப்படுவதற்கு முன்பு நீதி அமைச்சர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் உட்கட்டமைப்பை ஆய்வு செய்தார்.

நீதிமன்ற கட்டடங்கள், அலுவலகங்கள், காப்பகங்கள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட பிற வசதிகளின் புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தேவையான வசதிகளையும் அவர் ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 01/05/2021 - 09:26


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.