பீஜிங்கில் வரலாறு காணாத குளிர்

சீனாவின் பீஜிங் நகரில் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவு குளிரால் மக்கள் நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவாக அங்கு வெப்பநிலை மைனஸ் 19.6 டிகிரி செல்சியசுக்கு இறங்கியுள்ளது. 

அத்துடன் பலமாக வீசும் குளிர் காற்றால் பெய்ஜிங் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் இதுபோன்ற குளிர் காற்றுடன் கூடிய குறைந்த வெப்பநிலை  அங்கு 1966ஆம் ஆண்டு வீசியது.

கடந்த புதன்கிழமை பீஜிங்கில் உள்ள 20 தேசிய வானிலை நிலையங்களிலும் வெப்பநிலை மிகக்குறைவான அளவையே காட்டியதாக பெய்ஜிங் நகராட்சி வானிலை நிலையம் கூறியது. 

கடந்த புதன்கிழமையில் இருந்து இதுபோன்ற குளிரையும் குளிர் காற்றையும் சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.  அதனையடுத்து பீஜிங் நகராட்சி மன்றம் கடுங்குளிர் மற்றும் குளிர் காற்று குறித்து எச்சரிக்கையை விடுத்தது.  அங்கு பூச்சியத்துக்கும் குறைவான அளவிலான வெப்பநிலையே இருக்கும் என்றும் வானிலை அதிகாரிகள் கூறினர்.  குளிரைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டனர்.  இந்த வெப்பநிலை இன்று சனிக்கிழமையில் இருந்து படிப்படியாகக் கூடி வழக்கநிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிலையம் தெரிவித்தது.

Sun, 01/10/2021 - 08:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை