சவால் மிக்க சூழலில் பிறக்கும் புதிய வருடம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா வாழ்த்து

2021 புத்தாண்டு இந்நாட்டு மக்களுக்கும் முழு உலகிலுமுள்ள மக்களுக்கும் சவால் மிக்க சூழ்நிலையில் பிறக்கின்றது. சகல சவால்களுக்கும் மத்தியில் புதுப்பிக்கப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் இந்தப் புத்தாண்டை வரவேற்கத் தயாராக உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று சபாநாயகர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில்,..

இந்த சவால்களுக்கு சமாந்தரமாக நாம் கற்றுக்கொண்ட பாடம், ஒன்றிணைந்து பெற்றுக்கொண்ட வெற்றி என்பன புத்தாண்டுக்கு நுழையும் போது வலுவான மனோதிடத்துடன் முன்னேறிச் செல்வதற்கு முக்கியமானதாக இருக்கும்.

விசேடமாக கொவிட் 19 சவாலை வெற்றிகரமாக முறியடிப்பதில், அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினருடன், சகல இலங்கையர்களினதும் அர்ப்பணிப்புக்கு மரியாதையான நன்றியைத் தெரிவிக்க இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றேன்.

பூர்த்தியடைந்துள்ள வருடத்தில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்தாலும் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி, மக்களின் இறையாண்மையை உயர்ந்த இடத்தில் வைக்க முடிந்தமை சகலருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஜனநாயகத்தின் உயர் பிரதிபலனை இலங்கை பாராளுமன்றம் என்ற வகையில் தற்பொழுது மாத்திரமன்றி எதிர்காலத்திலும் மக்களின் அபிலாஷைகளை தொடர்ந்தும் நிறைவேற்றுவதே எமது நோக்கமாகும். பிறக்கவிருக்கும் 2021 புத்தாண்டு நிச்சயமாக ஒரு தீர்மானம் மிக்க ஆண்டாக அமையும். இந்த சகல சவால்களையும் வெற்றிகொள்ள, எமது தேசிய கீதத்தில் கூறப்பட்டுள்ளமை போன்று இன, மத, குலம் போன்ற பேதங்களை மறந்து இதயங்களாலும், மனங்களாலும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கையர் அனைவரையும் அழைக்கின்றோம்.

இந்தப் புத்தாண்டில் நாம் எதிர்பார்ப்பும் உண்மையான வெற்றி அதுவாகும்.

அனைத்து இலங்கையளர்களுக்கும் ஆரோக்கியம், சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

 

Fri, 01/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை