உலகில் கொரோனா சம்பவம் 90 மில்லியனைத் தாண்டியது

உலகெங்கும் கொரோனா தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 90 மில்லியனைத் தாண்டி இருப்பதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு குறிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் வேகமாக பரவும் புதிய திரிபுகளை கட்டுப்படுத்த உலகெங்கும் சுகாதார ஊழியர்கள் போராடி வரும் நிலையிலேயே தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதன்படி கடந்த 10 வாரங்களுக்குள் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பதாக ஜோன் ஹொப்கின்ஸ் தரவு காட்டுகிறது.

கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 45 மில்லியனாக இருந்த நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவில் அது 90 மில்லியனை எட்டியுள்ளது. இதில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 22 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த பெருந்தொற்று ஓர் ஆண்டை கடந்திருக்கும் நிலையில் இதனால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 2 மில்லியனை நெருங்கியுள்ளது.

Tue, 01/12/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை