நைகர் கிராமங்களில் தாக்குதல்: 79 பேர் பலி

நைகரின் இரு கிராமங்கள் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய பயங்கரத் தாக்குதல்களில் 79 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

மாலி நாட்டுடனான நைகரின் மேற்கு எல்லைப் பகுதியில் இருக்கும் சொம்பங்கு கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலில் சுமார் 49 பேர் கொல்லப்பட்டு மேலும் 17 பேர் காயமடைந்திருப்பதோடு சாரும்டராயி கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மேலும் 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்தாரிகள் கிராமத்தை சுற்றிவளைத்து பலரையும் கொன்றதாக உள்ளூர் வானொலி செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பகுதிகளுக்கு இராணுவத்தினர் அனுப்பப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அல்காசே அல்ஹமதா தெரிவித்துள்ளார்.

நிலத்தால் சூழப்பட்ட நைகர் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளது. அந்நாட்டில் சுமார் 230,000 அகதிகளும் 250,000 உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களும் இருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது.

பொக்கோ ஹராம் குழுவினர் பல ஆண்டுகளாக அந்நாட்டை அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த மாதத்திலும் டிப்பா பிராந்தியத்தில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர்.

Mon, 01/04/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை