5 நாட்களில் 427 விபத்துக்கள்; 30 பேர் பலி: 280 பேர் காயம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்து நாட்களுக்குள் 427 வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன் அவற்றில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் 280 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் மேலும் 90 பேர் கடுமையான காயங்களுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டும் என்றும் அவற்றை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்றுள்ள வாகன விபத்துக்களில் 05 பேர் மரணம் அடைந்துள்ளதுடன், மேலும் 40 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேவேளை கடந்த 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் நாடளாவிய ரீதியில் 427 விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன் அதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 280 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

அத்துடன் 119 வாகனங்கள் விபத்துகளினால் சேதமாகியுள்ளன.

பெரும்பாலும் முச்சக்கர வண்டிகள் மோட்டார் சைக்கிள்கள் மூலமான விபத்துக்களே அதிகளவு காணப்படுவதாகவும் பாதசாரிகளும் இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/27/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை