கிழக்கு; கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 483 பேர்

கிழக்கு மாகாணத்தின் கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 483 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் காத்தான்குடி நிலையத்தில் 115 பேரும் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் 48 பேரும் பெரிய கல்லாறு நிலையத்தில் 19 பேரும் கரடியனாறு நிலையத்தில் 94 பேரும் பதியதலாவையில் 63 பேரும் மருதமுனையில் 91 பேரும் பாலமுனையில் 53 பேரும் நேற்று நண்பகல்வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதுடன் குச்சவெளி நிலையத்தில் நேற்றுவரை எவரும் அனுதிக்கப்படவில்லை எனவும் அந்த ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று நண்பகலுடன் முடிவடைந்துள்ள 24 மணி நேர காலப்பகுதியில் காத்தான்குடியில் 16 பேரும் கரடியணாரு நிலையத்தில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தடன் கிழக்கு மாகாணத்திலுள்ள 8 கொரோனா சிகிச்சை நிலையங்களில் வெளி மாவட்டத்தவர்கள் உட்பட இது வரையில் 2075 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வெளியேரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மத்திய குறூப் நிருபர்

Mon, 01/04/2021 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை