லிபிய கடலில் தஞ்சக்கோரிக்கை படகு மூழ்கி 43 பேர் உயிரிழப்பு

லிபிய கரைக்கு அப்பால் மத்தியதரைக்கடலில் ஆபிரி க்க குடியேறிகளுடனான படகு ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த 43பேர் உயிரிழந்திருப்பதாக இரு ஐ.நா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  

சவ்யா நகரில் இருந்து புறப்பட்ட இந்த படகு ஒருசில மணி நேரங்களுக்குப் பின் அபாயம் கொண்ட கடல் பகுதியில் கவிழ்ந்திருப்பதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவனம் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.  

கடலோரக் காவல் படையினரால் 10பேர் காப்பாற்றப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த படகில் மேற்கு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மாத்திரம் இருந்ததாக உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான படகு விபத்து ஒன்று இந்த ஆண்டில் இடம்பெறும் முதல் சந்தர்ப்பமாக இது உள்ளது. மத்தியதரைக் கடலைக் கடக்கும் முய ற்சியில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் குடியேறிகள் ஐரோப்பாவை அடைவதற்கான பிரதான பாதையாக போர் சூழல் நீடிக்கும் லிபியா மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/22/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை