தாய் அரச குடும்பத்தை விமர்சித்த பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை

தாய்லாந்தின் சர்சைக்குரிய அரச நிந்தனைச் சட்டத்தின்கீழ் முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அந்தச் சட்டத்தின் கீழ் இத்தனை அதிக ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

சமூக வலைதளத்தில் தாய்லாந்து முடியாட்சியை விமர்சித்து அந்தப் பெண் பதிவுகள் வெளியிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதைத் தொர்ந்து பாங்கொக் குற்றவியல் நீதிமன்றம் இந்தக் கடுமையான தண்டனையை விதித்துள்ளது.

அஞ்சன் என்ற அந்த 63 வயது பெண் சமூக ஊடகப் பக்கங்களில் போட்காஸ்ட் முறையில் ஓடியோ பதிவுகளை வெளியிட்டார்.

தாம் வெறுமனே ஓடியோ கோப்புகளை மட்டுமே வெளியிட்டதாகவும், அவற்றின் உள்ளடக்கம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் 'லெசே மெஜஸ்டி' என்ற சட்டம் முடியரசுக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடை செய்கிறது. உலகில் உள்ள இத்தகைய சட்டங்களிலேயே இது கடுமையானதாகும்.

Thu, 01/21/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை