Header Ads

ரஞ்சனை சபைக்கு அழைக்கும் தீர்மானம் 3 வாரத்தில்

- சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபை அமர்வுக்கு அழைப்பது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு மூன்றுவார காலத்தை வழங்குமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார். 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அழைப்பதற்கு நடவடிக்கையெடுக் குமாறும் எதிர்க்கட்சியினரால் நேற்று திங்கட்கிழமை சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டு எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு கூறினார். 

''மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர விடயத்தில் அது தொடர்பாக நன்கு ஆராய்ந்து சட்டப்பூர்வமான பின்னணியுடனேயே அவரை பாராளுமன்றத்திற்கு அனுமதியளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று ரஞ்சன் ராமநாயக்க விடயத்திலும் சட்ட ஆலோசனைகளை பெற்று இறுதித் தீர்மானத்தை வழங்குகின்றேன். இதற்கு மூன்று வாரகால அவகாசத்தை வழங்குகங்கள். உறுப்பினர்களுக்கு இத தொடர்பாக எழுத்து மூலம் ஏதேனும் முன்வைக்க இருந்தால் இரண்டு வாரங்களுக்கு அதனை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்'' என்றும் அவர் தெரிவித்தார். 

ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி ரத்து தொடர்பில் சபையில் கடும் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Wed, 01/20/2021 - 08:37


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.