உகண்டா ஜனாதிபதி தேர்தல்: 34 ஆண்டுகளாக பதவியில் உள்ள முசவெனி வெற்றி

உகண்டா ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் நீண்டகால ஜனாதிபதி யுவேரி முசவெனி மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். எனினும் தேர்தல் மோசடி இடம்பெற்றிருப்பதாக அவரது பிரதான போட்டியாளரான பொபி வைன் குற்றம்சாட்டியுள்ளார்.  

கடந்த ஜனவரி 14ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் முசவெனி 59வீத வாக்குகளை வென்றிருப்பதாகவும் எதிர்த்துப் போட்டியிட்ட பொபி வைன் 35வீத வாக்குகளை பெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.    இதன்படி 1986ஆம் ஆண்டு தொடக்கம் பதவியில் இருக்கும் 76வயதான முசவெனி தனது ஆறாவது தவணைக்காக பதவி ஏற்கவுள்ளார்.  

எனினும் இந்தத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஆபிரிக்க ஒன்றியம் பங்கேற்காததோடு எந்த பிரதான கண்காணிப்புக் குழுவும் இடம்பெறாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல உரிமைக் குழுக்களும் கவலை வெளியிட்டுள்ளன.     

Mon, 01/18/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை