இஸ்ரேலின் தாக்குதலில் சிரியாவில் 31 பேர் பலி
கிழக்கு சிறியாவில் ஆயுதக் கிடங்குகள் மற்றும் இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஏழு படையினர் மற்றும் 24 கூட்டணி போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டெயிர் எஸ்சோர் தொடக்கம் சிரிய மற்றும் ஈராக் எல்லையில் புகாமல் பாலைவனப் பகுதி வரை பல்வேறு இலக்குகள் மீது இஸ்ரேல் விமானப் படை 18க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டபோதும் அது தொடர்பில் மேலதிக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் இஸ்ரேல், சிரியா மீது நடத்தும் இரண்டாவது தாக்குதலாக இது உள்ளது. கடந்த ஜனவரி 7ஆம் திகதியும் இஸ்ரேல் இவ்வாறான வான் தாக்குதலை நடத்தியிருந்தது.
from tkn
Post a Comment