நோர்வே: பைசர் தடுப்பூசி போட்ட 29 பேர் உயிரிழப்பு

நோர்வேயில் கொரோனா தொற்றுக்கு எதிரான பைசர்–பயோஎன்டெக் தடுப்பு மருந்தை போட்டிக்கொண்ட 29பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் அந்த மருந்தின் பாதுகாப்புக் குறித்த கவலை அதிகரித்துள்ளது.  

குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர். இது குறித்து புளூம்பேர்க் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  

உயிரிழந்தவர்களில் 13பேர் மீது நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவர்கள் தடுப்பூசி தொடர்பான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து, வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் மூத்தோருக்கும், நோய் முற்றிய நிலையில் இருப்போருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளது என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நோர்வேயில் பதிவுசெய்யப்பட்ட மரணங்கள் குறித்து விசாரணை நடத்த, பைசர்–பயோஎன்டெக் நிறுவனங்கள் அந்நாட்டு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக புளூம்பேர்க் கூறியது. 

நோர்வேயில் ஏற்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகமல்ல என்றும் அது எதிர்பார்ப்பிற்கு உட்பட்டது என்றும் பைசர் நிறுவனம் கூறியது. 

நோர்வேயில் முதற்கட்டமாகத் தற்போது பராமரிப்பு இல்லங்களில் உள்ள மூத்தோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது

Mon, 01/18/2021 - 13:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை