எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி

மாணவர்களுக்கான ரியூசன் வகுப்புகளை எதிர்வரும் 25ம் திகதி முதல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொரொனா வைரஸ் சூழ்நிலை காரணமாக மேல்மாகாணத்தில் ரியூசன் வகுப்புகளை நடத்துவதற்கு மேலும் சில காலங்கள் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ரியூஷன் வகுப்புக்கள் கொரோனா வைரஸ் தொற்று மத்திய நிலையங்களாக மாறிவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

கொரொனா வைரஸ் சூழ்நிலை காரணமாக தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ரியூசன் வகுப்புக்களை எதிர்வரும் 25ம் திகதி நடத்துவதற்கான அனுமதியை வழங்கும் சுற்றுநிருபம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சுற்றுநிருபத்திற்கிணங்க மேல் மாகாணம் தவிர்ந்த டியுசன் வகுப்புகளை நடத்துவதற்கே எதிர்வரும் 25ம் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க 50வீத மாணவர்களே வகுப்புக்களில் அனுமதிக்கப்படுவர்.

ஆகக் கூடியது 100மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

எனினும் மேற்படி ரியூசன் வகுப்புகள' க.பொ.த. சாதாரண தரம், மற்றும் உயர்தர மாணவர்களுக்காகவே நடத்தப்படவுள்ளன.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நாம் அது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 01/18/2021 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை