2020/21 பெரும்போக நெல் அறுவடை; 2,500 கி. நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

- நாடு - ரூ.50 முதல் ரூ. 44
- சம்பா - ரூ. 52 முதல் ரூ. 46

2020/21 பெரும்போக நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 2,500 கிலோ நாடு, சம்பா நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி தரநியமமான நாட்டரிசி நெல், ஈரலிப்பு 14 வீதமான நிர்ணய விலை ஒரு கிலோ 50.00 ரூபாவும், ஈரலிப்பு 14 – 22 வீதம் வரை ஒரு கிலோவுக்கு 44.00 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யவும்,

தரநியமமான சம்பா நெல், ஈரலிப்பு 14 வீதமான நிர்ணய விலை ஒரு கிலோ 52.00 ரூபாவும், ஈரலிப்பு 14 – 22 வீதம் வரை ஒரு கிலோவுக்கு 46.00 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் தொடக்கம் 2020/21 இற்கான பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளதால், அதற்கமைய எதிர்பாராத அளவிலான விலைச் சரிவைக் கட்டுப்படுத்துவதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, 2020/21 பெரும்போக நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேபோன்று உரமானியம் பெறும் சிறிய மற்றும் பாரிய நீர்ப்பாசன விவசாயிகள் விதைத்த நில அளவுக்கமைய குறைந்தது 01 முதல் 1.5 ஹெக்டயார் இடையிலான விவசாயிகளிடமிருந்து 1,000 கிலோவும் 1.5 இற்கு அதிகமான 02 ஹெக்டயார் வரையான விவசாயிகளிடமிருந்து 1,500 கிலோவையும் நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Wed, 01/06/2021 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை