கொவிட்19 தொற்றிலிருந்து விடுபட முதலில் மருந்து கண்டிபிடித்தது இலங்கை

உலக நாடுகள் கொவிட்19 தொற்றிலிருந்து விடுப்படுவதற்கான வழிமுறைகளை தேடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தொற்றுக்கு மருந்தைக் கண்டிப்பிடிக்கும் செயற்பாட்டை இலங்கைதான் முதலில் ஆரம்பித்தாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்கால கொவிட் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட்19 தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக எதிர்க்கட்சி; குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கொவிட்19 தொற்று கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு நாடும் எந்த மட்டத்தில் உள்ளதென மதிப்பீடு செய்வதற்கு இரண்டு முறைகள் உள்ளன. அதன் பிரகாரம்தான் ஒவ்வொரு நாடும் கொவிட்19 தொற்று எவ்வாறு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளன எனத் தெரியும்.

உலக சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு எத்தனை தொற்றாளர்கள் உள்ளனர் மற்றும் நாட்டின் சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு எவ்வளவு தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர் என்பதுதான் முதலாவது மதிப்பீட்டு முறையாகும். இரண்டாவது மதிப்பீட்டு முறை உலக சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு எத்தனை பேர் இறக்கின்றனர். மற்றும் நாட்டின் சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு எத்தனை போர் தொற்றுக்குள்ளாகி இறக்கின்றனர் என்பதாகும்.

இந்த இரண்டு மதிப்பீடுகளிலும் உலகைவிட இலங்கைக்கு பாதிப்பு அதிகமென்றால் கொவிட்19 ஒழிப்பில் இலங்கை தோல்விக்கண்டுள்ளதென எண்ண முடியும். நேற்றுவரை உலக சனத்தொகையில் ஒரு மில்லயனுக்கு 11,353 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஆனால், இலங்கையில் 2180 தொற்றாளர்களாகும். அதேபோன்று நேற்றுவரை உலக சனத்தொகையில் ஒரு மில்லயனுக்கு 245 பேர் தொற்றுக்குள்ளாகி இறக்கின்ற சூழலில் இலங்கையில் 10 பேர் மாத்திரமே இறக்கின்றனர். ஆகவே, கொவிட்19 ஒழிப்பு செயற்பாட்டில் இலங்கை மிகவும் உயரிய மட்டத்திலுள்ளது. உலக வரலாற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் முழு உலகிலும் தொற்றியுள்ள இந்த வைரஸ் தொடர்பிலான கலந்துரையாடல்கள் நாட்டில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக இந்த வைரஸுக்கு பொறுத்தமான தடுப்பூசி யாது? உள்நாட்டில் வைரஸுக்கு பொறுத்தமான மருந்த யாது? என்பது தொடர்பில் நாட்டில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 01/09/2021 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை