கொவிட்-19 பூர்வீகத்தை தேடி நிபுணர்கள் குழு சீனா வருகை

கொவிட்–19 பெருந்தொற்றின் பூர்வீகம் பற்றி விசாரணையை ஆரம்பிப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர் குழு சீனாவின் வூஹான் நகரை சென்றடைந்துள்ளது.

சீனா மற்றும் உலக சுகாதார அமைப்புக்கு இடையே பல மாதங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னரே இந்த குழு சீனா செல்ல அனுமதி கிடைத்துள்ளது.

பத்து விஞ்ஞானிகளைக் கொண்ட இந்தக் குழு ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் இந்த நோய்த் தொற்று ஆரம்பித்ததுடன் தொடர்புபட்ட கடல் உணவுச் சந்தையின் மக்களை சந்தித்து பேசவுள்ளனர். கொவிட்–19 தொற்று 2019 இறுதியில் வூஹானில் முதல்முறை கண்டுபிடிக்கப்பட்டது.

Fri, 01/15/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை