கொவிட்-19: ஒரே நாளில் 18,000 பேர் உயிரிழப்பு

உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் சுமார் 18,000 பேர் கொவிட்–19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

புதிய வகைக் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடியவை என்பதால் உலக நாடுகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளன. தடுப்பூசிகள் தான் நோய்ப்பரவலுக்கு தீர்வு என நம்பப்படுகிறது. ஆனால் தற்போது தடுப்பூசி விநியோகம் செய்வது குறித்து, அஸ்ட்ராசெனக்கா நிறுவனத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

உலகின் சில நாடுகளில் கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. போர்த்துக்கல், பிரிட்டன், பின்லாந்து போன்ற நாடுகள் எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி கொவிட்–19 நோய்த்தொற்றால் உலக அளவில் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் உலகெங்கும் 18,109 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகளை மேற்கொள்காட்டி ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

Fri, 01/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை