கிழக்கில் கொரோனா தொற்று 1624ஆக அதிகரிப்பு

- மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 1624 ஆக அதிகரித்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நேற்று திங்கட்கிழமை  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்முனை  சுகாதார பிரிவில் 966 பேரும், அம்பாறையில் 66 பேரும், மட்டக்களப்பில்  382 பேரும், திருகோணமலையில் 210 பேரும், அடங்கலாக 1432 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 71 பேரும், ஓட்டமாவடி  பிரிவில் 39 பேரும், வாழைச்சேனை  பிரிவில் 06 பேரும், ஏறாவூர் பிரிவில் 19 பேரும், மட்டக்களப்பு பிரிவில் 29 பேரும், காத்தான்குடி  பிரிவில் 158 பேரும், பட்டிப்பளை  பிரிவில் 06 பேரும், வெல்லாவெளி பிரிவில் 05 பேரும், களுவாஞ்சிக்குடி  பிரிவில் 35 பேரும், ஆரையம்பதி பிரிவில் 09 பேரும், செங்கலடி, வவுனதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் தலா ஒருவருமாக மொத்தம் 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  திருகோணமலை  210 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

(ஒலுவில் விசேட நிருபர்)  

Tue, 01/12/2021 - 19:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை