நுவரெலியா: 16 தமிழ் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகின்றன

- அமரர் ஆறுமுகனின் முயற்சிக்கு பலன் கிட்டியது 

நுவரெலியா மாவட்டத்தில் 16தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தொடர் முயற்சியால் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த வருடம் கல்வி அமைச்சரிடம் இதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.  

இதன்பின்னர், நுவரெலியா மாவட்ட தேசிய பாடசாலை விவகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இதுகுறித்து கடந்த வாரம் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமையவே நுவரெலியா மாவட்டத்தில் 16தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் முதன்முறையாக 16தமிழ் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை நுவரெலியா மாவட்ட தமிழ் மாணவர்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாகும். தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகள் வருமாறு,

ஹைலண்ட் கல்லூரி, பொஸ்கோ கல்லூரி, தலவாக்கலை த.ம.வி,ஹோல்புரூக் த.ம.வி, கொட்டகலை த.ம.வி,பொகவந்தலாவை சென்ட் மேரீஸ் கல்லூரி, நோர்வூட் த.ம.வி, மஸ்கெலியா சென்ட் ஜோசப் கல்லூரி, ஹோர்ன்சி கல்லூரி, புலூம் பீல்ட் கல்லூரி, இராகலை த.ம.வி., அல் மின்ஹாஜ் ம.வி., பூண்டுலோயா த.ம.வி, புனித திரித்துவ த.ம.வி,மெதடிஸ்ட் கல்லூரி, மராயா த.வி. என்பன தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளன.

Fri, 01/22/2021 - 10:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை