மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் பெப். 15 இல் திறப்பு

- கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளையும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ளன மாணவர்களுக்காக மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் கல்விச் செயற்பாடுகளை ஆராய நேற்று வெள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தப்பத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தினசரி மாணவர்களுடன் தொடர்புகொள்ளும் ஒரு குழுவாக ஆசிரியர்களும் உள்ளமையால் அவர்களுக்கும் முன்னுரிமை அளிப்பது நியாயமானது. கொவிட்19 தடுப்பூசியை ஆசிரியர்களுக்கும் பெற்றுக் கொடுப்பது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படமெனவும் அவர் கூறினார்.

பொறுப்புள்ள அரசாங்கமாக, அந்த பொறுப்பிலிருந்து விடுபட நாங்கள் தயாராக இல்லை.மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அந்த அந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துப் பாடசாலைகளையும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் மேற்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகள் மற்றும் ஆரம்ப வகுப்புகளை தொடங்குவது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 01/30/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை