கடல் கொள்ளையரால் துருக்கி மாலுமிகள் 15 பேர் கடத்தல்

மேற்கு ஆபிரிக்க கடல்பகுதியில் துருக்கி சரக்குக் கப்பல் ஒன்றின் மீது கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு 15 மாலுமிகள் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையை துருக்கி இராணுவம் ஆரம்பித்துள்ளது.

கப்பலில் இருந்து பணியாளர்கள் ஆரம்பத்தில் பாதுகாப்பு அறைக்குள் பூட்டிக்கொண்டு இருந்த நிலையில் கடல்கொள்ளையர்கள் ஆறு மணி நேரத்திற்கு பின்னர் அந்த அறைக்குள் நுழைந்திருப்பதாக துருக்கி கடல்சார் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் கப்பலில் இருந்த பெரும்பாலான பணியாளர்களை கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள் கினியா வளைகுடா பகுதியில் மூன்று மாலுமிகளுடன் கப்பலை விட்டுச் சென்றுள்ளனர். அந்தக் கப்பல் தற்போது கபோனின் கென்டில் துறைமுகத்தை நோக்கி பயணித்து வருகிறது.

நைஜீரியா, கினியா, டோகோ, பெனின் மற்றும் கெமரூன் கடற்பகுதியில் இருக்கும் கினியா வளைகுடா பகுதி கடல்கொள்ளையர்கள் காரணமாக ஆபத்தான கடற்பகுதியாக கருதப்படுகிறது.

2019 இல் நைஜீரிய கடலுக்கு அப்பால் 10 துருக்கி மாலுமிகள் கடத்தப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு குறைவான காலத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 01/25/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை