11 சீன சுரங்கத் தொழிலாளர் இரு வாரங்களின் பின் மீட்பு

சீனாவில் நிலத்துக்கடியில் 600 மீற்றர் ஆழத்தில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கி இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களின் முதல் குழுவினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சங்டொன் மாகாணத்தில் தங்கச் சுரங்கத்தில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்பில் சுரங்க நுழைவாயில் மூடிக்கொண்டதால் இவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் ஆரம்பத்தில் பதினொரு சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சுரங்கத்தின் நீண்ட குறுகலான பாதை வழியாக சிக்கி இருப்பவர்களுக்கு உணவு, மருந்து வழங்கப்படுவதோடு அவர்களுடன் உரையாட தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 11 சுரங்கப் பணியாளர்கள் நேற்று வெளியே கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்கள் பலவீனமான உடல்நிலையுடன் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 100 மீற்றர் ஆழத்தில் நீர் மட்டம் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு சுரங்கத் தொழிலாளி இருப்பதாக நம்பப்படுகிறது. தவிர 11 சுரங்கத் தொழிலாளர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றி தெரியாதுள்ளது.

Mon, 01/25/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை