கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி; 10 ஆயுர்வேத மருந்துகளுக்கு அனுமதி

கொரோனா வைரஸ் மருந்தாக நோய் எதிர்ப்பு சக்திக்கென பெற்றுக்கொடுக்கப்படும் 10ஆயுர்வேத மருந்துகளுக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது.  

மேற்படி 10மருந்துகளும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பானமாகவே அங்கீகரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்தார்.  

எவ்வாறெனினும் அதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விசேட நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகுமென்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இதுபோன்ற 30வகை மருந்துகள் ஆயுர்வேத திணைக்களத்தின் நிபுணர்கள் குழுவின் அனுமதிக்காக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

கேகாலை தம்மிக்க பண்டாரவினால் அறிமுகப்படுத் தப்பட்டுள்ள பாணி மருந்து மேற்படி நிபுணர் குழுவின் அனுமதியையடுத்து சிகிச்சைகளுக்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்   

Tue, 01/19/2021 - 13:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை